Friday, April 01, 2011

குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (4)

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கஸ் ஸபாத பில் அம்ரி வல் அஜீம(த்)த அலர்ருஷ்தி, வ அஸ்அலுகஷ் ஷுக்ர நிஃமதி(க்)க, வ ஹுஸ்ன இபாததிக், வ அஸ்அலுக கல்பன் ஸலீம(ன்வ்) வ லிஸானன் ஸாதிக(ன்வ்) வ அஸ்அலுக மின் கைரி மா தஃலமு அஊது பிக மின்ஷர்ரி மா தஃலமு அஸ்தஃகுபிருக மிம்மா தஃலமு இன்னக அல்லாமுல் ஃகுயூப்

பொருள்: இறைவா! ஈமானில் நிலைகுலையாமையையும் நேர்வழியில் உறுதியையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். மேலும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை நல்ல முறையில் வணங்கி வழிபடுவதற்கும் ஆற்றலை உன்னிடம் கேட்கிறேன். மேலும் பழுதற்ற, சிறந்த இதயத்தையும் உண்மை பேசும் நாவையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நீ அறிகிற நன்மைகளை உன்னிடம் கேட்கிறேன். நீ அறிகிற தீமைகளில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ அறிகிற பாவங்களில் இருந்து உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். திண்ணமாக நீ மறைவானவை எல்லாம் நன்கு அறிபவன்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பன் நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) இஃக்Fபிர் லீ தன்பீ வ அத்ஹிப் ஃகைல கல்பீ வ அஇத்னீ மின் முளில்லாதில் Fபி(த்)தனி மா அப்கைதனி

பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்களின் இரட்சகனே! எனது பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் என் இதயத்தின் சினத்தை அகற்றுவாயாக! மேலும் நீ என்னை வாழுமாறு விட்டு வைத்திருக்கும் காலத்தில் வழிகேட்டில் ஆழ்த்தக்கூடிய குழப்பங்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவா(த்)தி வரப்பல் அர்ழி வரப்பல் அர்ஷிழ் அழீம் ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். காலிகல் ஹப்பி வன்நவா முநஜ்ஜலத் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்ஆன், அஊது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆகிதுன்(ம்)பி நாஸியதிஹ். அன் (த்)தல் அவ்வலு Fப லைஸ கப்லக ஷைய், வஅன்தல் ஆخகிறு Fப லைஸ பஃதக ஷைய், வ அன்தழ் ழாஹிறு Fப லைஸ Fபௌகக ஷைய், வ அன்தல் பாதினு Fபலைஸ தூன(க்)க ஷைய், இக்ளி அலைய்யத்தைன, வ அஃக்னினி மினல் Fபக்ர்

பொருள்: யா அல்லாஹ்! வானங்கள் - பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதிபதியே! வித்துக்களையும் பேரீச்சங் கொட்டைகளையும் விளைவிப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கி அருளியவனே! அனைத்துப் பொருள்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் முன் உச்சி ரோமம் உன் பிடியிலேயே உள்ளது! நீயே முதலாமவன். உனக்கு முன் எதுவுமில்லை! நீயே இறுதியானவன். அனைத்தும் அழிந்த பிறகு நீ மட்டும் எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன். உனக்கு அப்பால் எதுவுமே இல்லை! நீயே அந்தரங்கமானவன். நீ அன்றி எதுவுமில்லை! எனது கடனை அடைத்து வறுமையை அகற்றி என்னை வளமடையச் செய்வாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஃதி நப்ஸீ தக்வாஹா வ ஸக்கிஹா அன்(த்)த خகைரு மன் ஸக்காஹா அன்த்த வலிய்யுஹா வ மௌலாஹா

பொருள்: யா அல்லாஹ்! எனது மனத்திற்கு அதன் பக்தியை வழங்கி, அதைப் பக்குவப்படுத்துவாயாக! எனது மனத்தை நீயே சிறந்த முறையில் பக்குவப்படுத்தக் கூடியவன்! நீயே அதன் துணைவனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறாய்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல் கஸ்லி வ அவூது பி(க்)க மினல் ஜுப்னி வல் ஹரிமி வல் புخக்லி வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ர்

பொருள்: யா அல்லாஹ் திண்ணமாக நான் இயலாமை,சோம்பல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கோழைத்தனம், முதுமையின் தளர்வு, கருமித்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம லக அஸ்லம்த்து வபிக ஆமன்த்து வ அலைக்க தவக்கல்து வ இலைக்க அனப்து வ பிக காஸம்து அஊது பி இஸ்ஸதிக அன்துளில்லனி லா இலாஹ இல்லா அன்த்த, அன்த்தல் ஹய்யுல்லதீ லாயமூத்து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன்.

பொருள்: யா அல்லாஹ்! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்து வாழ்கிறேன். உன் பக்கமே மீண்டேன். மேலும் உனக்காகவே தர்க்கித்தேன். நீ என்னை வழிகேட்டில் ஆழ்த்துவதை விட்டும் உனது கண்ணியத்தின் பொருட்டால் உதவி கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. என்றைக்கும் மரணமாகாமல் நித்திய ஜீவனாய் இருப்பவன் நீயே!- ஜின்னுகள், மனிதர்கள் அனைவரும் மரணம் அடைந்து விடுவர்!

No comments: