பிரார்த்தனையின் முன்னால் அல்லாஹ்வைப் புகழ்வதும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதும் அதன் ஒழுங்காகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் தொழுகையின் போது அல்லாஹ்வைப் புகழாமலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்திப்பதைக் கண்டார்கள். அப்போது இவர் அவசரப்பட்டு விட்டார் எனக்கூறி விட்டு அவரை அழைத்து:
"நீங்கள் யாராயினும் பிரார்த்தனைப் புரிந்தால் அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்கட்டும். பின்னர் இறைத்தூதர் (ஸல்) மீது ஸலவாத்துச் சொல்லட்டும். பின்னர் அவர் விரும்பியதைக் கேட்டு பிரார்த்திக்கட்டும்" என்றார்கள்.
அறிவிப்பவர்: பலாலா இப்னு உபைத் (ரலி) ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி.
எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி அல்லாஹ்விடம் தன் தேவைகளை முறையிட்டுப் பிரார்த்திப்போம். அல்லாஹ் எமக்குப் பதில் சொல்வான். எமது தேவைகளை நிறைவேற்றி வைப்பான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"அல்லாஹ் மிகவும் வெட்கமுள்ளவனாகவும், மிக்க கொடையாளியாகவும் உள்ளான். ஒரு மனிதன் கையை உயர்த்தி அவனிடம் பிரார்த்தனைப் புரியும்போது அந்தக் கைகளை வெறுமையாகத் திருப்பிவிட அல்லாஹ் வெட்கப்படுகிறான்"
அறிவிப்பவர்: ஸல்மான் அல் பாரிஸி (ரலி)ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி, இப்னு மாஜா.
Saturday, June 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment