Wednesday, April 25, 2012

வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் தினமும் ஸலாம் சொல்லிக் கொண்டிருக்கும் தொழுகையாளிகள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தொழுகையில் (அமர்வில்) ‘அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்’ (அல்லாஹ்வுக்கு சாந்தியுண்டாகட்டும். இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறி வந்தோம்.

இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், ‘நிச்சயமாக அல்லாஹ்வே ‘ஸலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால், ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவாத்து வத்தய்யிப்பாத்து. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி உண்டாகட்டும்)’ என்று கூறுங்கள்.

இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என்றாகும். மேலும், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்)’ என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம்’ என்றார்கள்.

Monday, April 23, 2012

உடலுக்கும் ஆன்மாவுக்குமான ஒளியை இறைவனிடம் வேண்டிப் பெறுதல்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள் அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள்.

‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார். (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

 புகாரி பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6316


Friday, February 03, 2012

நீர் அருந்தும் முறையும், நீர் அருந்தும் முன்னும் பின்னும் மொழிய வேண்டிய இறை நினைவும்!

அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில் ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம் நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.

“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்: முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும் பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு வந்தனர்”அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ.

“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது “பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’ என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ

Thursday, December 29, 2011

எவரைத் திட்டி ஏசிப் பேசினீர்களோ, அவருக்காக ஓதும் துஆ!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ ஓதியதை நான் கேட்டேன்.

اَللّهُمَّ فَأيٌما مُؤمِنٍ سبَبتهُ فَاجعَل ذَالِكَ لَهُ قُربَةٌ إلَيكَ يَوم القِيَامَةِ


”அல்லாஹும்ம பFஅய்யமா முஃமினின் ஸபப்தஹு பFஅஜ்அல் தாலிக லஹு குர்பதன் இலைக்க யவ்மல் கியாமா”

பொருள்: ’யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசி விட்டேனோ அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமை நாளில் உன் பக்கம் நெருங்கி வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக.!’

ஆதார நூல்கள்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல்பாரி பாகம்-11 பக்கம்-171

முஸ்லிம் பாகம்-4 பக்கம்-2007.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்.

فَاجعَلحَا لَهُ زَكَاةً وٌَرَحمَةً
'பFஅஜ்அல்ஹா லஹு ஜகாதன் வ ரஹ்மா”

பொருள்: அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக ஆக்குவாயாக!

Thursday, December 22, 2011

தனது உடலில் வலியை உணருபவர் என்ன செய்ய வேண்டும்? என்ன ஓத வேண்டும்?

தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்। பிறகு ஏழு தடவை இவ்வாறு ஓத வேண்டும்:

اَعُودُ بِاللهُِ وقُدرَتِهِ شَرٌِ مَا اَجِدُ وَ اُحَاذِرُ


”அவூதுபில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர்”

பொருள்: அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்; நான் உணருகிற அஞ்சுகின்ற தீமையை விட்டு!

Friday, December 16, 2011

நிராகரிப்பாளர் தும்மும்போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

يَحديكمُ اللهُ و يُصلحُ بَالكُم

”யஃதீகுமுல்லாஹு வ யுஷ்லிஹு பாலகும்”

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்। உங்களின் நிலைமையை சீராக்கட்டும்.!

ஆதார நூல்கள்:

திர்மிதி பாகம்-5 பக்கம்-82

அஹ்மத் பாகம்-4 பக்கம் 400

அபூதாவூத் பாகம்-4 பக்கம்-308

ஸஹீஹுத் திர்மிதி பாகம்-2 பக்கம் 354

Friday, June 10, 2011

ரஜப் மாத துவக்கத்திலிருந்து ரமலானை அடையும்வரை தினம் ஓத வேண்டிய துஆ!

روي عن أنس بن مالك – رضي الله عنه – أنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رواه أحمد والطبران

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ரஜப் மாதத்தை அடைந்தால் கீழ்காணும் து ஆவை ஒதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹூம்ம பாரிக்லனா பி(f) ரஜப வ ஷாபான் வ பல்லிகனா ரமலான்
பொருள்: யாஅல்லாஹ் ரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக இன்னும் ரமலானை எங்களை அடையச்செய்வாயாக.

Friday, April 01, 2011

குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (4)

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கஸ் ஸபாத பில் அம்ரி வல் அஜீம(த்)த அலர்ருஷ்தி, வ அஸ்அலுகஷ் ஷுக்ர நிஃமதி(க்)க, வ ஹுஸ்ன இபாததிக், வ அஸ்அலுக கல்பன் ஸலீம(ன்வ்) வ லிஸானன் ஸாதிக(ன்வ்) வ அஸ்அலுக மின் கைரி மா தஃலமு அஊது பிக மின்ஷர்ரி மா தஃலமு அஸ்தஃகுபிருக மிம்மா தஃலமு இன்னக அல்லாமுல் ஃகுயூப்

பொருள்: இறைவா! ஈமானில் நிலைகுலையாமையையும் நேர்வழியில் உறுதியையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். மேலும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை நல்ல முறையில் வணங்கி வழிபடுவதற்கும் ஆற்றலை உன்னிடம் கேட்கிறேன். மேலும் பழுதற்ற, சிறந்த இதயத்தையும் உண்மை பேசும் நாவையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நீ அறிகிற நன்மைகளை உன்னிடம் கேட்கிறேன். நீ அறிகிற தீமைகளில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ அறிகிற பாவங்களில் இருந்து உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். திண்ணமாக நீ மறைவானவை எல்லாம் நன்கு அறிபவன்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பன் நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) இஃக்Fபிர் லீ தன்பீ வ அத்ஹிப் ஃகைல கல்பீ வ அஇத்னீ மின் முளில்லாதில் Fபி(த்)தனி மா அப்கைதனி

பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்களின் இரட்சகனே! எனது பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் என் இதயத்தின் சினத்தை அகற்றுவாயாக! மேலும் நீ என்னை வாழுமாறு விட்டு வைத்திருக்கும் காலத்தில் வழிகேட்டில் ஆழ்த்தக்கூடிய குழப்பங்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவா(த்)தி வரப்பல் அர்ழி வரப்பல் அர்ஷிழ் அழீம் ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். காலிகல் ஹப்பி வன்நவா முநஜ்ஜலத் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்ஆன், அஊது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆகிதுன்(ம்)பி நாஸியதிஹ். அன் (த்)தல் அவ்வலு Fப லைஸ கப்லக ஷைய், வஅன்தல் ஆخகிறு Fப லைஸ பஃதக ஷைய், வ அன்தழ் ழாஹிறு Fப லைஸ Fபௌகக ஷைய், வ அன்தல் பாதினு Fபலைஸ தூன(க்)க ஷைய், இக்ளி அலைய்யத்தைன, வ அஃக்னினி மினல் Fபக்ர்

பொருள்: யா அல்லாஹ்! வானங்கள் - பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதிபதியே! வித்துக்களையும் பேரீச்சங் கொட்டைகளையும் விளைவிப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கி அருளியவனே! அனைத்துப் பொருள்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் முன் உச்சி ரோமம் உன் பிடியிலேயே உள்ளது! நீயே முதலாமவன். உனக்கு முன் எதுவுமில்லை! நீயே இறுதியானவன். அனைத்தும் அழிந்த பிறகு நீ மட்டும் எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன். உனக்கு அப்பால் எதுவுமே இல்லை! நீயே அந்தரங்கமானவன். நீ அன்றி எதுவுமில்லை! எனது கடனை அடைத்து வறுமையை அகற்றி என்னை வளமடையச் செய்வாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஃதி நப்ஸீ தக்வாஹா வ ஸக்கிஹா அன்(த்)த خகைரு மன் ஸக்காஹா அன்த்த வலிய்யுஹா வ மௌலாஹா

பொருள்: யா அல்லாஹ்! எனது மனத்திற்கு அதன் பக்தியை வழங்கி, அதைப் பக்குவப்படுத்துவாயாக! எனது மனத்தை நீயே சிறந்த முறையில் பக்குவப்படுத்தக் கூடியவன்! நீயே அதன் துணைவனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறாய்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல் கஸ்லி வ அவூது பி(க்)க மினல் ஜுப்னி வல் ஹரிமி வல் புخக்லி வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ர்

பொருள்: யா அல்லாஹ் திண்ணமாக நான் இயலாமை,சோம்பல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கோழைத்தனம், முதுமையின் தளர்வு, கருமித்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம லக அஸ்லம்த்து வபிக ஆமன்த்து வ அலைக்க தவக்கல்து வ இலைக்க அனப்து வ பிக காஸம்து அஊது பி இஸ்ஸதிக அன்துளில்லனி லா இலாஹ இல்லா அன்த்த, அன்த்தல் ஹய்யுல்லதீ லாயமூத்து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன்.

பொருள்: யா அல்லாஹ்! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்து வாழ்கிறேன். உன் பக்கமே மீண்டேன். மேலும் உனக்காகவே தர்க்கித்தேன். நீ என்னை வழிகேட்டில் ஆழ்த்துவதை விட்டும் உனது கண்ணியத்தின் பொருட்டால் உதவி கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. என்றைக்கும் மரணமாகாமல் நித்திய ஜீவனாய் இருப்பவன் நீயே!- ஜின்னுகள், மனிதர்கள் அனைவரும் மரணம் அடைந்து விடுவர்!

Tuesday, February 08, 2011

நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான பாதுகாவல் கருவி!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் பின்வரும் இந்த வார்த்தையை என்றாவது ஒருநாள் 100 தடவை ஓதினாரோ அவருக்கு அது. 10 அடிமைகளை விடுதலை அளித்ததற்குச் சமமாக அமையும்! மேலும் அவருக்கு அதன் மூலம் 10 நன்மைகள் எழுதப்படும்! 10 பாவங்கள் அழிக்கப்படும். மேலும் இந்த வார்த்தை மாலை நேரம் வரை - நாள் முழுவதும் பாதுகாப்பதற்கான கருவியாக அவருக்கு அமையும். மேலும் அவரது அமலை விடவும் சிறந்த அமலை செய்து கொண்டு எவரும் வர முடியாது. அவரை விடவும் அதிகமான அமல்களை செய்திருக்கும் மனிதரைத் தவிர!.

’லா இலாஹ இல்லல்லாஹு வஹதஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.’

ஆதார நூல்கள்: புகாரி பாகம் 4 பக்கம் 95. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

Friday, January 28, 2011

அல்லாஹ்வின் பூரணமான மன்னிப்பைப் பெற....!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் இந்த வார்த்தைகளை ஓதினாரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் யுத்தத்தில் புறங்காட்டி ஓடியிருந்தாலும் சரியே!

”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”

பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன். அவன் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன். பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன். மேலும் பாவமீட்சி தேடி அவன் பக்கமே மீளுகிறேன்.

ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569.
-ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511. அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 182. ஜாமிஉல் உஸூல் அஹாதீஸிர் ரஸூல் பாகம் 4 பக்கம் 389-390.