روي عن أنس بن مالك – رضي الله عنه – أنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رواه أحمد والطبران
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ரஜப் மாதத்தை அடைந்தால் கீழ்காணும் து ஆவை ஒதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹூம்ம பாரிக்லனா பி(f) ரஜப வ ஷாபான் வ பல்லிகனா ரமலான்
பொருள்: யாஅல்லாஹ் ரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக இன்னும் ரமலானை எங்களை அடையச்செய்வாயாக.

1 comments:
தாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு ஸவாயித் முஸ்னது அஹ்மதில் மட்டும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது:
حَدَّثَنَا عَبْد اللَّهِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ زَائِدَةَ بْنِ أَبِي الرُّقَادِ عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ
பிற ஸஹீஹ்களில் இந்த ஹதீஸைக் காணமுடியவில்லை.
இந்த ஹதீஸ் எடுத்தாளப்பட்டுள்ள நூல்கள்:
ஸவாயிதுல் முஸ்னத் அஹ்மது (2346); கஷ்ஃபுல் அஸ்த்தார்(616) அமலுல் யவ்மி வல்லைலத்தி அல் அவ்ஸத் (3939); அத்-துஆ (911); அல் ஹிலிய்யா (6/269); ஷுஅபுல் ஈமான் (3534); ஃபளாயிலுல் அவ்காத் (14); அல்மவ்ளிஹ் (2/473); தாரீக் இப்னு அஸாகிர் (40/57).
இந்த ஹதீஸ், பலவீனமான அறிவிப்பாளர் ஸாயிததிப்னி அபிர்ருகாத் வழியாக மட்டும் அறிவிக்கப்படுவதால் பெரும்பாலான ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களுள்
இமாம் தஹபீ, இமாம் ஹாபிள் இபுனு ஹஜர் அல்-அஸ்கலானீ, இமாம் இபுனு முயீன், இமாம் அபூதாவூது, இமாம் அபூஹாத்தம், இமாம் இபுனு ஹிப்பான், இமாம் நவவீ, இமாம் புகாரீ, இமாம் நஸயீ, இமாம் ஹைதமீ, இமாம் இபுனு ரஜப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) அடங்குவர்.
இந்த ஹதீஸை மறுதலிக்கும் இமாம்களின் நூல்கள்:
தாரீகுல் கபீர் (3/433); அல்ஜுர்ஹு (3/613); அல்மஜ்ரூஹீன் அல்மீஸான் அத்தஹ்தீப் (3/305); அத்தக்ரீப் (1/256); தாரீக் இபுனு முயீன் (2/179); அல்காமில் (3/1044); அல்அத்கார் (547); லதாயிஃபுல் மஆரிஃப் (பக்-143); அல்முஜம்மிஃ (2/165); தபய்யனுல் அஜப்
thanks சத்தியமார்க்கம்.காம்:
Post a Comment