Wednesday, April 25, 2012

வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் தினமும் ஸலாம் சொல்லிக் கொண்டிருக்கும் தொழுகையாளிகள்!

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தொழுகையில் (அமர்வில்) ‘அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்’ (அல்லாஹ்வுக்கு சாந்தியுண்டாகட்டும். இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறி வந்தோம்.

இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், ‘நிச்சயமாக அல்லாஹ்வே ‘ஸலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால், ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவாத்து வத்தய்யிப்பாத்து. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி உண்டாகட்டும்)’ என்று கூறுங்கள்.

இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என்றாகும். மேலும், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்)’ என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம்’ என்றார்கள்.

No comments: