1) "அல்ஹம்து லில்லாஹில்லது அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் னுஷூர்"
பொருள்: "நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக!"
நூல்: புஹாரீ: பாகம், 11. பக்கம், 113. முஸ்லிம்: பாகம், 4. பக்கம், 2083.
2) "லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம், ரப்பிஃக்ஃபிர்லி"
குறிப்பு: தூங்கி விழித்து இதை எவர் கூறுகிறாரோ, அவருக்கு பாவம் பொருத்தருளப்படும். (அந்நிலையில்) அவர் பிரார்த்தனை செய்தால் அவருக்கு அங்கீகரிக்கப்படும். அவர் தயாராகி உழுச் செய்து விட்டு பின்னர் தொழுவாரானால் அவருடையத் தொழுகை அங்கீகரிக்கப்படும்.
நூல்: 3/39 பத்ஹுடன் புஹாரீ மற்றும் அது அல்லாதது. வாக்கியத்தொடர் இப்னுமாஜா விற்குரியதாகும். 2/335, ஸஹீஹ் இப்னுமாஜாவைக் காண்க.
3) "அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ ஃபீஜஸதீ வரத்தஅலய்ய ரூஹீ, வ அதினலீ பிதிக்ரிஹி"
பொருள்: "என் உடலில் எனக்கு ஆரோக்கியத்தை நல்கி, என்னுடைய உயிரை எனக்குத் திருப்பித் தந்து, அவனை நினைவு கூர்வதற்கு எனக்கு அனுமதியும் வழங்கியவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக!
நூல்: திர்மிதீ: 5/473. ஸஹீஹ் திர்மிதீ: 3/144.
Thursday, August 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment