Friday, June 27, 2008

மரணித்தவரின் இல்லம் சென்றால் செய்ய வேண்டிய துஆ!

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். ................ புள்ளிகள் இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِ ---- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

அல்லாஹும்மக்பி(F)ர் ................... வர்ப(F)ஃ தரஜ(த்)தஹு பி(F)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(F) ஹு பீ(F) அகிபி(B)ஹி பி(F)ல் காபிரீன் வக்பி(F)ர் லனா வலஹு யாரப்ப(B)ல் ஆலமீன் வப்(F)ஸஹ் லஹு பீ(F) கப்(B)ரிஹி வநவ்விர் லஹு பீ(F)ஹி.

இதன் பொருள் :

இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1528

No comments: