Monday, October 20, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (16)

أَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

பொருள்: யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக!

يَا مُقَلَّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ

பொருள்: உள்ளங்களை புரட்டுபவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்து நிற்கச் செய்வாயாக!

أَللَّهُمَّ أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ

பொருள்: யாஅல்லாஹ்! இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் நலவைக் கேட்கிறேன்.

أَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَـتِيْ فِي اْلاُمُوْرِ كُلِّهَا، وَأَجِرْنِيْ مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ اْلآخِرَةِ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய அனைத்து காரியங்களின் முடிவுகளையும் சிறந்ததாக ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!

No comments: