أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
பொருள்: இறைவா! வறுமை, ஏழ்மை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் பிறருக்கு அநீதம் செய்வதை விட்டும் பிறரின் அநீதிக்கு ஆளாவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ
பொருள்: இறைவா! (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக தீய அண்டை வீட்டார் திசைமாறச் செய்து விடுவார்கள்.
أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ قَلْبٍ لاَّيَخْشَعُ، وَمِنْ دُعَاءٍ لاَّيُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لاَّتَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لاَّيَنْفَعُ، أَعُوْذُ بِكَ مِنْ هَؤُلاَءِ اْلأَرْبَعِ
பொருள்: யாஅல்லாஹ்! (உனக்குப்) பயப்படாத உள்ளம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, நிறைவடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய இந்த நான்கு தன்மைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூற்கள்: அபூதாவூத், நஸயீ, ஹாகிம்.
No comments:
Post a Comment