أَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَي الْخَلْقِ، أَحْيِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِّيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِّيْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَي وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيْمًا لاَيَنْفَدُ،وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَتَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَي وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَي لِقَائِكَ فِيْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَفِتْنَةٍ مُّضِلَّةٍ، أَللَّهُمَّ زَيِّنَّا بِزِيْنَةِ اْلإِيْمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ
பொருள்: யாஅல்லாஹ்! உன்னுடைய மறைவான ஞானம் மற்றும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றல் ஆகியவற்றின் பொருட்டால் கேட்கிறேன். நான் வாழ்வது எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை வாழச்செய்வாயாக! நான் இறப்பதுதான் எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! இறைவா! நான் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் உன்னைப் பயப்படவும், விருப்பிலும் வெறுப்பிலும் உண்மையைப் பேசவும், வறுமையிலும் செழிப்பிலும் நடுநிலையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் முடிந்துவிடாத அருட்கொடையையும் விடைபெறாத கண் குளிச்சியையும் விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் வழி கேட்டின் குழப்பத்திலும் தீய,விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டு விடாது உன்னை சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் இன்பத்தையும் உன்னிடம் கேட்கிறேன். யாஅல்லாஹ்! ஈமானின் பொலிவூட்டும் தன்மைகளைக் கொண்டு எங்களை அலங்கரிப்பாயாக! எங்களை நேர்வழி பெற்றோரின் வழியில் ஆக்குவாயாக!
ஆதார நூற்கள்: நஸயீ, அஹமத்.
No comments:
Post a Comment