Friday, June 19, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (43)

أَللَّهُمَّ طَهِّرْنِيْ مِنَ الذُّنُوْبِ وَالْخَطَايَا، أَللَّهُمَّ َ نَقِّنِيْ مِنْهَا كَمَا يُنَقَّي الثَّوْبُ اْلأَبْيَضُ مِنَ الدَّنَسِ، أَللَّهُمَّ طَهِّرْنِيْ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِالْبَارِدِ

பொருள்: யாஅல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! யாஅல்லாஹ்! அழுக்கிலிருந்து வெள்ளைத் துணியைத் தூய்மைப் படுத்தப்படுவதைப் போல் என்னை இவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! பனிக்கட்டி, பனித்துளி, குளிர்ந்த நீர் ஆகியவைகளைக் கொண்டு என்னை தூய்மைப் படுத்துவாயாக!

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَسُوْءِ الْعُمُرِ وَفِتْنَةِ الصَّدْرِ وَعَذَابِ الْقَبْرِ

பொருள்: யாஅல்லாஹ்! கஞ்சத்தனம், கோழைத்தனம், முதுமை, மனக் குழப்பம், மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ، وَمِيْكاَئِيْلَ، وَرَبَّ إِسْرَافِيْلَ، أَعُوْذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

பொருள்: யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம் மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَأَعِذْنِيْ مِنْ شَرِّ نَفْسِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னை பாதுகாப்பாயாக!

ஆதார நூற்கள்: திர்மிதி, நஸயீ

No comments: