Friday, July 09, 2010

குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (3)

உச்சரிப்பு: அஊது பில்லாஹி மின் ஜஹ்தில் பலாஇ வதர்கிஷ் ஷகாஇ வ ஸூஇல் களாயி வஷமாததில் அஃதா

பொருள்: கடுமையான துன்பத்தை விட்டும் துர்ப்பாக்கியம் அடைவதை விட்டும் விதியின் தீமையை விட்டும் எதிரிகளின் எக்காளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹுஸ்னி வமினல் அஜ்ஸி வல் கஸ்லி வ மினல் ஜுப்னி வல் புخக்லி வமினல் மஃஸமி வல் மஃக்ரமி வமின் கஃலபதித் தைனி வ கஹ்ரிர் ரிஜால்

பொருள்: யா அல்லாஹ்! கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவம், கடன் மற்றும் கடன்களின் பாரம், பிற மனிதர்களின் கொடுமைகள் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுஸாமி வமின் ஸய்யியில் அஸ்காம்

பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்மஸ்துர் அவ்ராத்தீ வ ஆமின் ரவ்ஆத்தி வஹ்குபள்னீ மின் பைனி யதய்ய வ மின் خகல்Fபீ வஅன் யமீனி வஅன் ஷிமாலி வமின் Fபௌக்கீ வ அஊது பி அழ்மதி(க்)க மின் அன் உஃக்தால மின் தஹ்த்தீ

பொருள்: இறைவா என்னுடைய பலவீனங்களை மறைப்பாயாக. என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக. எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக. இன்னும் கீழே இருந்து எதிர்பாராத விதமாக கொல்லப்படுவதில் இருந்து -உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்Fபிர் கதீஅதீ வஜஹ்லீ வ இஸ்ராFபீ Fபீ அம்ரீ வமா அன்த அஃலமு பிஹி மின்னி அல்லாஹும் மஃக்கFபிர் லீ ஜத்தி வஹஸ்லீ வக(த்)தயீ வஅம்தீ வகுல்லு தாலிக இன்தீ

பொருள்: யா அல்லாஹ்! எனது பாவத்தையும் எனது அறியாமையையும் எனது விஷயத்தில் நான் மேற்கொள்ளும் வரம்பு மீறல்களையும் மற்றும் எந்தப் பிழைகளை என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் விரும்பி நாடி செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! நான் தவறுதலாக செய்தவற்றையும், வேண்டுமென செய்தவற்றையும் மன்னிப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்Fபிர் லீ மா கத்தம்(த்)து வமா அخக்கர்து வமா அஸ்ரர் (த்)து வமா அஃலன்து வமா அன்(த்)த அஃலமு பிஹி மின்னீ அன்தல் முகத்திம். வ அன்தல் முஅخக்கிர் வஅன்த அலா குல்லி ஷைஇன் கஸீர்

பொருள்: நான் முன்னர் செய்த பாவங் களையும் பின்னர் செய்த இரகசியமாய் செய்த- பகிரங்கமாய்ச் செய்த பாவங்களையும் மேலும் எந்தப் பிழைகளை என்னை விட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருள்களையும் உருவாக்கியவன் நீயே! மேலும் நீ அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாய்த் திகழ்கின்றாய்!

No comments: