Friday, May 14, 2010

குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (2)

உச்சரிப்பு: ரப்பனா லா துணுஸிஃக் குலூபனா பஃத இத் ஹதை(த்)தனா வ ஹப்லனா மி(ன்ல்)லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு எங்களை வழிபிறழச் செய்து விடாதே! மேலும் உன்னருளில் இருந்து எங்களுக்கு கொடை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ

பொருள்: என் இரட்சகனே! உன்னிடம் இருந்து எனக்கு தூய்மையான சந்ததிகளை வழங்குவாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பனா ழலம்னா அன்Fபுஸனா வ இன் (ல்) லம் தஃக்Fபிர் லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் இழைத்துக் கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டத்திற்குரியவர்களாகி விடுவோம்!

உச்சரிப்பு: ரப்பனஸ்ரிFப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றிடு. நிச்சயமாக அதன் வேதனை ஓயாது தொல்லை தரக் கூடியது!

உச்சரிப்பு: ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஸ்லிஹ்லீ தீனியல்லதி ஹுவ இஸ்மது அம்ரி வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லத்தீ Fபீஹா மஆதீ வ அஸ்லிஹ் ஆகிரதியல்லத்தீ Fபீஹா மஆதீ வஜ்அலில் ஹயாத்த ஸியாதத(ன்ல்) லீ Fபீ குல்லி கைரின் வல் மௌத்த ராஹத(ன்ல்) லீ மின் குல்லி ஷர்

பொருள்: எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்னுடைய தீனை எனக்கு சீர்படுத்துவாயாக! எனது வாழ்வு எதில் இருக்கிறதோ அத்தகைய எனது உலகத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! எங்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதோ அந்த எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! ஒவ் வொரு நன்மையையும் செய்வதற்கு (எனக்கு சாத்தியமாகும் வகையில்) என் வாழ்நாளை அதிகமாக்குவாயாக! மேலும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் அமைதி அளிக்கக் கூடியதாக மரணத்தை ஆக்குவாயாக!

No comments: