Showing posts with label அண்டை வீட்டார். Show all posts
Showing posts with label அண்டை வீட்டார். Show all posts

Friday, April 17, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (36)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ يِوْمِ السُّوْءِ، وَمِنْ لَيْلَةِ السُّوْءِ، وَمِنْ سَاعَةِ السُّوْءِ، وَمِنْ صَاحِبِ السُّوْءِ، وَمِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ

பொருள்: யாஅல்லாஹ்! பகலில் ஏற்படும் தீங்கை விட்டும் இரவில் ஏற்படும் தீங்கை விட்டும் தீங்கு ஏற்படும் நேரத்தை விட்டும் தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ ، وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ فَقِّهْنِيْ فِي الدِّيْنِ

பொருள்: இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக!

ஆதார நூற்கள்: தப்ரானி, திர்மிதி, புகாரி, முஸ்லிம்.

Friday, April 10, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (35)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

பொருள்: இறைவா! வறுமை, ஏழ்மை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் பிறருக்கு அநீதம் செய்வதை விட்டும் பிறரின் அநீதிக்கு ஆளாவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ

பொருள்: இறைவா! (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக தீய அண்டை வீட்டார் திசைமாறச் செய்து விடுவார்கள்.

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ قَلْبٍ لاَّيَخْشَعُ، وَمِنْ دُعَاءٍ لاَّيُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لاَّتَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لاَّيَنْفَعُ، أَعُوْذُ بِكَ مِنْ هَؤُلاَءِ اْلأَرْبَعِ

பொருள்: யாஅல்லாஹ்! (உனக்குப்) பயப்படாத உள்ளம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, நிறைவடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய இந்த நான்கு தன்மைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூற்கள்: அபூதாவூத், நஸயீ, ஹாகிம்.