Showing posts with label நித்தியஜீவன். Show all posts
Showing posts with label நித்தியஜீவன். Show all posts

Friday, January 28, 2011

அல்லாஹ்வின் பூரணமான மன்னிப்பைப் பெற....!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் இந்த வார்த்தைகளை ஓதினாரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் யுத்தத்தில் புறங்காட்டி ஓடியிருந்தாலும் சரியே!

”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”

பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன். அவன் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன். பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன். மேலும் பாவமீட்சி தேடி அவன் பக்கமே மீளுகிறேன்.

ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569.
-ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511. அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 182. ஜாமிஉல் உஸூல் அஹாதீஸிர் ரஸூல் பாகம் 4 பக்கம் 389-390.

Friday, May 15, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (39)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ، لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، وَحْدَكَ لاَشَرِيْكَ لَكَ، الْمَنَّانُ، يَابَدِيْعَ السَّمَوَاتِ وَاْلأَرْضِ، يَاذَا الْجَلاَلِ وَاْلإِكْرَامِ، يَا حَيُّ يَاقَيُّوْمُ، إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக புகழனைத்தும் உனக்குரியதே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தனித்தவன், இணையற்றவன். கொடையாளன். வானங்களை யும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! வல்லமை மிக்கவனே! கண்ணியத்திற்குரியவனே! நித்தியஜீவனே! நிரந்தரமானவனே! நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரகைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூற்கள்: திர்மிதி, அபூதாவூத்.