Showing posts with label மன்னிப்பு. Show all posts
Showing posts with label மன்னிப்பு. Show all posts

Friday, January 28, 2011

அல்லாஹ்வின் பூரணமான மன்னிப்பைப் பெற....!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் இந்த வார்த்தைகளை ஓதினாரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் யுத்தத்தில் புறங்காட்டி ஓடியிருந்தாலும் சரியே!

”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”

பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன். அவன் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன். பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன். மேலும் பாவமீட்சி தேடி அவன் பக்கமே மீளுகிறேன்.

ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569.
-ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511. அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 182. ஜாமிஉல் உஸூல் அஹாதீஸிர் ரஸூல் பாகம் 4 பக்கம் 389-390.

Tuesday, December 28, 2010

உலகத்தையும், மறுமையையும் ஒன்றிணைக்கும் துஆ!

தாரிக் அல் அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'புதிதாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை கற்றுக் கொடுப்பார்கள். பிறகு பின்வரும் இந்தக் கலிமாக்களை ஓதி துஆச் செய்யுமாறு அவரைப் பணிப்பார்கள்.'

அல்லாஹும்ம ஃபி(F)ர்ளீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஆபி(F)னீ, வர்ஜுக்னீ.

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு; எனக்குக் கருணை செய்; எனக்கு வழிகாட்டு; எனக்கு ஆரோக்கியம் அளித்திடு; மேலும் எனக்கு உணவு வழங்கு!.'

ஆதார நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் 'திண்ணமாக இந்த வார்த்தைகள் உனது உலகத்தையும், உனது மறுமையையும் ஒன்றிணைக்கும் என்று வந்துள்ளது.'

Sunday, January 10, 2010

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களின் மகிமை!

'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். (Sura Al-Baqarah: 2:285)

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (Sura Al-Baqarah: 2:286)

Friday, July 17, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (46)

أَللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوْبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا، وَاهْدِنَا سُبُلَ السَّلاَمِ ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ اِلَي النُّوْرِ، وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِيْ أَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُلُوْبِنَا، وَأَزْوَاجِنَا، وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ، وَاجْعَلْنَا شَاكِرِيْنَ لِنِعَمِكَ، مُثْنِيْنَ بِهَا عَلَيْكَ، قَابِلِيْنَ لَهَا، وَأَتْمِمْهَا عَلَيْنَا.

பொருள்: யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களை இணைப்பாயாக! எங்களுக்கு மத்தியில் (நட்பை) சீர்படுத்துவாயாக! வெற்றிக்குரிய வழிகளை எங்களுக்கு காட்டு வாயாக! இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் எங்களுக்கு ஈடேற்றம் அளிப்பாயாக! வெளிப்படையான, அந்தரங்கமான அனைத்து மானக்கேடான விஷயங்களை விட்டும் எங்களை நீ பாதுகாப்பாயாக! எங்கள் செவிப்புலன்கள், பார்வைகள், உள்ளங்கள், மனைவியர்கள், வாரிசுகள் ஆகிய அனைத்திலும் அபிவிருத்தி செய்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய். உன்னுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர்களாக, அதற்காக உன்னை புகழ்பவர்களாக, உனது அருட்கொடைகளை ஏற்றுக் கொள்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! மேலும் எங்களுக்கு (உன்) அருட்கொடைகளை பரிபூரணப் படுத்துவாயாக!

ஆதார நூல்: ஹாகிம்.

Friday, February 20, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (28)

أَللَّهُمَّ اغْفِرْلِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக! கிருபை செய்வாயாக! நேர்வழி காட்டுவாயாக! சுகமளிப்பாயாக! உணவளிப்பாயாக!

أَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا،وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفـِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நானே மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவராலும் எனது பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் பேரருளால் என்னை மன்னித்து, கிருபையும் செய்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.

ஆதார நூற்கள் : முஸ்லிம், புகாரி.

Friday, February 13, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் ( 27)

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَللَّهُمَّ اغْفِرْ لِيْ هَزْلِيْ وَجِدِّيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து -பாவங்களையும்- மன்னித்தருள்வாயாக!

ஆதார நூல் : புகாரி.

Friday, December 19, 2008

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (22)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ،وَتَرْكَ الْمُنْكَرَاتِ،وَحُبَّ الْمَسَاكِيْنِ،وَأَنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمَنِيْ، وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ،وَحُبَّ مَنْ يُّحِبُّك،وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُـنِيْ إِلَىحُبِّكَ.

பொருள்: யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழை களை நேசிக்க அருள்புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.

ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்

Friday, December 12, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (21)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ وَاْلأَعْمَالِ وَاْلأَهْوَاءِ

பொருள்: யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)

أَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!

(ஆதாரம்: திர்மிதி)

Friday, September 05, 2008

இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டிய துஆ!

ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக் கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

َ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي

ஆதாரம்: புகாரி 1154


லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல் ஷையின் கதீர். அல்ஹம்து ல்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹி, அல்லாஹும்மஃக்பிர்லீ.

இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.

Friday, July 04, 2008

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓத வேண்டிய துஆ!

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல் கப்(B)ரி

இதன் பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1600

Friday, June 27, 2008

மரணித்தவரின் இல்லம் சென்றால் செய்ய வேண்டிய துஆ!

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். ................ புள்ளிகள் இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِ ---- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

அல்லாஹும்மக்பி(F)ர் ................... வர்ப(F)ஃ தரஜ(த்)தஹு பி(F)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(F) ஹு பீ(F) அகிபி(B)ஹி பி(F)ல் காபிரீன் வக்பி(F)ர் லனா வலஹு யாரப்ப(B)ல் ஆலமீன் வப்(F)ஸஹ் லஹு பீ(F) கப்(B)ரிஹி வநவ்விர் லஹு பீ(F)ஹி.

இதன் பொருள் :

இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1528

Friday, June 20, 2008

பயணத்திருந்து திரும்பும் போது ஓத வேண்டிய துஆ!

முந்திய பதிவின் துஆவையே ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.

இதன் பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.

ஆதாரம்: முஸ்லிம் 2392

Wednesday, April 30, 2008

கணவனை இழந்தவர்கள் ஓத வேண்டிய துஆ!

اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً


அல்லாஹும்மக்பி(F)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B)ன் ஹஸனதன்

இதன் பொருள்: இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் - 1527

Friday, April 25, 2008

சபை கூடி முடியும்போது ஓத வேண்டிய துஆ!

ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(F)ரு(க்)க வஅதூபு(B) இலை(க்)க.

இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: திர்மிதீ - 3355

கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

ஸுப்(B)ஹான(க்)கல்லாஹும்ம வபி(B)ஹம்தி(க்)க அஸ்தக்பி(F)ரு(க்)க வ அதூபு(B) இலை(க்)க.

இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: நஸயீ 1327