ஸஅத் பின் அபீ வக்காஷ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற மனிதர் வந்தார். 'எனக்குச் சில வாக்கியங்களைக் கற்றுத் தாருங்கள், நான் அவற்றைச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்' எனக் கேட்டார்.
அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: நீர் இவ்வாறு கூறும்:
லாஇலாஹ இல்லல்லாஹு வஹதஹூ லாஷரீகலஹூ, அல்லாஹ் அக்பர் கபீரா, வல்ஹம்துலில்லாஹி கஸீரா, ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஜீஜில் ஹகீம்.
பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அல்லாஹ் அனைவரினும் பெரியவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வைத் தூயவன் என அதிகம் துதிக்கிறேன். யாவரையும் மிகைத்த நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் உதவியும், பாதுகாப்புமின்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் இல்லை. (தீமைகளை விட்டு விலக) எந்த சக்தியும் இல்லை.
அந்த கிராமப்புற மனிதர் கேட்டார். இது எனது இரட்சகனுக்குரியது. எனக்காக என்ன உள்ளது? அதற்கு நபியவர்கள் நீர் கூறும்:
அல்லாஹும்ம ஃபி(F)ர்ளீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஜுக்னீ.
பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு வழிகாட்டுவாயாக! மேலும் எனக்கு உணவு வழங்குவாயாக!.'
ஆதார நூல்கள்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2072. அபூதாவூதில் சில விளக்கங்கள் கூடுதலாக உள்ளது. அந்த மனிதர் திரும்பி சென்றதும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'இரண்டு கைகள் நிரம்ப நன்மையை அள்ளிக் கொண்டார்'. பாகம் 1 பக்கம் 220.
Showing posts with label நன்மை. Show all posts

Tuesday, December 28, 2010
Friday, December 24, 2010
நீடித்த நிலையான நற்கருமங்கள் என்பவை எவை?
அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் (நீடித்த நிலையான நற்கருமங்கள்) என்பன: ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், வலா ஹௌல வஅலா குவ்வத்த இல்லாபில்லாஹ் எனும் கலிமாக்களாகும்.
பொருள்: அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வி(ன் உதவியும், பாதுகாப்புமி)ன்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் இல்லை. (தீமைகளை விட்டு விலக) எந்த சக்தியும் இல்லை.
ஆதார நூல்: அஹ்மத். ஹதீஸ் எண்: 513. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது. பார்க்க: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 297. புலூகுல் மறாம் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் இதனை அபூ ஸயீத் (ரலி) அவர்களின் அறிவிப்பாக - நஸாயீயிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்: இந்த அறிவிப்பை இப்னு ஹிப்பானும், ஹாகிமும் நம்பகமானது எனச் சொல்லியுள்ளனர்.

Friday, August 08, 2008
ஒரு காரியத்தில் ஈடுபட போகும்போது ஓத வேண்டிய துஆ!
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(F)ள்(க்)கல் அளீம். ப(F)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(F) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B)(த்)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B)ரிக் லீ பீ(F)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(F) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B)(த்)தி அம் ரீ வ ஆஜிஹி ப(F)ஸ்ரிப்(F)ஹு அன்னீ வஸ்ரிப்(F)னீ அன்ஹு வக்துர் யல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ
இதன் பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.
இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!
இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடுவாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي
ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(F)ள்(க்)கல் அளீம். ப(F)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(F) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B)(த்)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B)ரிக் லீ பீ(F)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(F) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B)(த்)தி அம் ரீ வ ஆஜிஹி ப(F)ஸ்ரிப்(F)ஹு அன்னீ வஸ்ரிப்(F)னீ அன்ஹு வக்துர் யல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ
இதன் பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.
இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!
இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடுவாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.
Labels:
அருள்,
இம்மை மறுமை,
துஆ,
நல்ல காரியங்கள்,
நன்மை,
பரக்கத்,
மார்க்கம்
Friday, June 20, 2008
பயணத்திருந்து திரும்பும் போது ஓத வேண்டிய துஆ!
முந்திய பதிவின் துஆவையே ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.
இதன் பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.
இதன் பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
Friday, June 13, 2008
பயணத்தின் போது ஓத வேண்டிய துஆ!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.
இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.
இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் - 2392
Friday, May 16, 2008
புயல் அடிக்கும் போது ஓத வேண்டிய துஆ!
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(F)ஹா வகைர மா உர்ஸிலத் பி(B)ஹி. வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(F)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B)ஹி
பொருள்: இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496
Sunday, April 06, 2008
வீட்டில் நுழையும் போது ஓதும் துஆ!
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْناَ ، وَعَلىَ رَبِّناَ تَوَكَّلْناَ،
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மௌலஜி, வகைரல் மஃக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா, வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.
பொருள்: இறைவா! (இந்த வீட்டில்) நுழைவதின் நன்மையையும் புறப்படுவதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம். நூல்: அபூதாவூத் 5096

நம்பிக்கை,
நன்மை,
புறப்படுதல்,
வீடு
Subscribe to:
Posts (Atom)