Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Friday, March 05, 2010

தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: ஹதீஸ் எண்: 6306

Friday, March 27, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (33)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُوْعِ، فَإِنَّهُ بِئْسَ الضَّجِيْعُ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْخِيَانَةِ، فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ

பொருள்: யாஅல்லாஹ்! பசியை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மனிதனை கீழே சாய்ப்பதில் மிகவும் தீயது. மேலும் மோசடி செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும்.

ஆதார நூல்: அபூதாவூத்.

Friday, February 27, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (29)

أَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ، أَنْتَ الْحَيُّ الَّذِيْ لاَ يَمُوْتُ، وَالْجِنُّ وَاْلإِنْسُ يَمُوْتُوْنَ

பொருள்: யாஅல்லாஹ்! நான் உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன் மீதே உறுதி கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன்னிடமே முறையிடுகிறேன். யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை. உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், என்னை நீ வழிதவறச் செய்யாதிருப்பாயாக! நீயே மரணிக்காத நித்திய ஜீவன். மனித, ஜின் இனத்தினர் மரணித்து விடுவர்.

ஆதார நூற்கள் : புகாரி, முஸ்லிம்.

Sunday, April 06, 2008

வீட்டில் நுழையும் போது ஓதும் துஆ!

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْناَ ، وَعَلىَ رَبِّناَ تَوَكَّلْناَ،

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மௌலஜி, வகைரல் மஃக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா, வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.

பொருள்: இறைவா! (இந்த வீட்டில்) நுழைவதின் நன்மையையும் புறப்படுவதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம். நூல்: அபூதாவூத் 5096