Showing posts with label துஆ. Show all posts
Showing posts with label துஆ. Show all posts

Friday, December 16, 2011

நிராகரிப்பாளர் தும்மும்போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?

يَحديكمُ اللهُ و يُصلحُ بَالكُم

”யஃதீகுமுல்லாஹு வ யுஷ்லிஹு பாலகும்”

பொருள்: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்। உங்களின் நிலைமையை சீராக்கட்டும்.!

ஆதார நூல்கள்:

திர்மிதி பாகம்-5 பக்கம்-82

அஹ்மத் பாகம்-4 பக்கம் 400

அபூதாவூத் பாகம்-4 பக்கம்-308

ஸஹீஹுத் திர்மிதி பாகம்-2 பக்கம் 354

Friday, June 10, 2011

ரஜப் மாத துவக்கத்திலிருந்து ரமலானை அடையும்வரை தினம் ஓத வேண்டிய துஆ!

روي عن أنس بن مالك – رضي الله عنه – أنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رواه أحمد والطبران

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ரஜப் மாதத்தை அடைந்தால் கீழ்காணும் து ஆவை ஒதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹூம்ம பாரிக்லனா பி(f) ரஜப வ ஷாபான் வ பல்லிகனா ரமலான்
பொருள்: யாஅல்லாஹ் ரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக இன்னும் ரமலானை எங்களை அடையச்செய்வாயாக.

Friday, January 21, 2011

அதிகம் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘அடியான் தன் இறைவனுடன் மிகவும் நெருக்கமாக ’ஸஜ்தா’வின் நிலையில் ஆகிறான். எனவே அப்போது அதிகம் துஆ கேளுங்கள்.’

ஆதார நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 350.

Tuesday, December 28, 2010

உலகத்தையும், மறுமையையும் ஒன்றிணைக்கும் துஆ!

தாரிக் அல் அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'புதிதாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை கற்றுக் கொடுப்பார்கள். பிறகு பின்வரும் இந்தக் கலிமாக்களை ஓதி துஆச் செய்யுமாறு அவரைப் பணிப்பார்கள்.'

அல்லாஹும்ம ஃபி(F)ர்ளீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஆபி(F)னீ, வர்ஜுக்னீ.

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு; எனக்குக் கருணை செய்; எனக்கு வழிகாட்டு; எனக்கு ஆரோக்கியம் அளித்திடு; மேலும் எனக்கு உணவு வழங்கு!.'

ஆதார நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் 'திண்ணமாக இந்த வார்த்தைகள் உனது உலகத்தையும், உனது மறுமையையும் ஒன்றிணைக்கும் என்று வந்துள்ளது.'

Monday, December 27, 2010

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு 'தஸ்பீஹ்' செய்வார்கள்?

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன், தமது வலது கரம் கொண்டு தஸ்பீஹை மடக்கிக் கொண்டிருந்தார்கள். (அதாவது வலது கைவிரல்களைக் கொண்டு எண்ணுவார்கள்.')

ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 81. திர்மிதி பாகம் 5 பக்கம் 521. பார்க்க: ஸஹீஹுல் ஜாமிவு பாகம் 4 பக்கம் 217. ஹதீஸ் எண்: 4865.

Thursday, December 23, 2010

சிறந்த துஆ! சிறந்த திக்ர்!

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திண்ணமாக சிறந்த பிரார்த்தனை (துஆ) அல்ஹம்துலில்லாஹ் என்பதாகும். சிறந்த திக்ர் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதாகும்.”

ஆதார நூல்கள்: திர்மிதி பாகம் 5 பக்கம் 462. இப்னு மாஜா பாகம் 2 பக்கம் 1249. ஹாகிம் பாகம் 1 பக்கம் 503. ஹாகிம் அவர்கள் இதனை நம்பகமானது என்றும் சொல்லியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுல் ஜாமிவு பாகம்1 பக்கம் 362.

Monday, September 20, 2010

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... (அதிரை ஏ.எம்.பாரூக்)

அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.

இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலச்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை ? ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும், இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலச்சியமாக இருக்க முடியாது.

நம்மால் இயன்றவரை ஒரு நிணைவூட்டும் விதமாக தொழுவதினால் ஏற்படும் இம்மை,மறுமைப் பலன்களை எழுதுவோம்.

தொழுகையினுடைய அமல் என்பது பாங்கு ஒலிக்கத் தொடங்கியது முதல் தொடங்கி விடுகிறது.

பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்.

தொழுகையாளிகளாகிய நாம் தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது அத்துடன் அது நின்றுவிடாமல் இன்னும் தொடருகிறது.

பாங்கிற்கு பதில்கூறி முடித்தப்பின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுகிறோம் அவ்வாறு ஓதப்படும்பொழுது ஒருமுறை ஓதினால் ஓதுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

ஒருமுறை ஓதுவதற்காக அல்லாஹ்வின் அருள்மழை பத்து அமுறை நம்மீது பொழிகிறதென்றால் அது சாதாரண விஷயமா ? இதைக் குறைத்து மதிப்பிட முடியுமா ? அல்லது இதற்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திக் கொண்டு இந்தளவுக்கு நன்மை தான் இது என்று வறையருத்துக் கூறமுடியுமா ? அல்லாஹ்வின் அருள்மழை நம்மீது பொழிகிறதென்றால் அதற்கு அளவேக் கிடையாது எல்லையைத் தாண்டிய நன்மை அல்லவா இது. சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

நாளை என்ன நடக்குமோ ? அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ ? என்ற பீதியிலும், அச்சத்திலும் இன்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் உறைந்துப் போய் இருப்பதற்கு காரணம் அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் இலகுவான வழிகளை அடைத்துக் கொண்டது ஒருக் காரணமாகும்.

பாங்கிற்கு பதில் கூறிவிட்டு ஸலவாத் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மீது இடைவிடாமல் இறங்கும் பொழுது அச்சமற்ற வாழ்வும், மனஅமைதியும் கிடைக்கும் இது உலக நன்மை. இது உலகில் வாழும்பொழுது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படும் நன்மைகள்.

மறுமை நன்மை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதி முடிந்ததும் அவர்களுக்காக சுவனத்தில் சங்கை மிகுந்த வசீலா எனும் உயர் பதவிக்காக பிரார்த்தனை செய்கிறோம், கண்மனி நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழும்பொழுது அவர்களுக்காக என்று நம்மிடத்தில் எதையும் கேட்டதில்லை மாறாக நம்முடைய நேர்வழிக்காக அவர்களின் வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழ்மையை தேர்வுசெய்து கொண்டார்கள் அப்படிப்பட்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது நம்மிடம் இந்த ஒன்றை மட்டுமேக் கேட்டார்கள் அதுவும் உலக வாழ்விற்காக அல்ல, மறுமையின் நிம்மதியான வாழ்வுக்காக பிரார்த்திக்கக் கூறினார்கள்.

அருமை நாயகம்(ஸல்) அவர்களுக்காக மறுமையில் வசீலா எனும் உயர் பதவிக்காக நாம் பிரார்த்திப்பதன் மூலமாக மறுமையில் நமக்கு மிகப்பெரியப் பரிசுக் காத்திருக்கிறது அந்தப் பரிசு மறுமையை உறுதியாக நம்பக் கூடியவர்களுக்கு மிகப்பெரியப் பாக்கியமிக்கதாக இருக்கும்.

அருமை நாயகம்(ஸல்) அவர்களின் வசீஸாவுக்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று யார் உலகில் பாங்கின் அழைப்பொலிக்குப் பிறகு தொடர்ந்து பிரார்த்தித்து வந்தாரோ அவருக்காக எந்தப் பரிந்துறையும் பயன் தரமுடியாத இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ்விடம் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் பரிந்துறை செய்வதாக வாக்களித்துள்ளார்கள்.

இது எத்தனை நன்மைகள் என்று வரையறுத்துக் கூறமுடியாத எல்லையற்ற நன்மையாகும் காரணம் தகிக்கும் வெயிலில் ஒவ்வொருவரும் தன் வியர்வையிலேயே தான் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது வாய்கள் மூடப்பட்டு கால்களும், கைகளும் தனக்கெதிராக சாட்சியமாகிக்கொண்டிருக்கும் கடுமையான நேரத்தில் உதவிக்கான எந்த வழியுமில்லாத அந்த நேரத்தில் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் நமக்காக வல்ல இறைவனிடம் பரிந்துறை செய்வார்கள் என்றால் இது வiரையறுத்துக் கூறக்கூடிய நன்மையில் உள்ளதா ? இல்லவே இல்லை இது கணக்கிட முடியாத பொக்கிஷக் குவியல்களாகும்.

'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 628

பாங்கொலிக்கு பதில் கொடுப்பதில் மட்டும் இத்தனை நன்மைகள் குவிந்து கிடக்கிறதென்றால் அண்ணல் அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தொழுது முடித்து பள்ளியை விட்டு வெளியேறும் போது நம்முடைய நன்மையின் எடை என்னவாக இருக்கும் ? என்பதை சிந்தித்தால் எந்த ஒரு பாங்கிற்கும் பதிலளித்து, ஸலவாத் ஓதி, வசீலாவுக்காகப் பிரார்த்திப்பதை தவற விட மாட்டோம்.

மேற்காணும் நன்மையின் பொக்கிஷங்களை மொத்தமாக அடைந்து கொள்வதற்கு தொழுகையாளிகளால் மட்டுமே முடியும். காரணம் தொழுகையாளிகளைத் தவிற தொழாதவருக்கு பாங்கொலியே கடுமையானதாக இருக்கும் பாங்கு சொல்லும் வரை பள்ளிவாசலுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் பாங்கொலியைக் கேட்டதும் தொழுகை முடியும் வரை பிற தொழுகையாளிகளின் கண்களில் படாதவாறு ஒளிவதற்கு இடத்தைத் தேடி ஓடிவிடுவார். வஸீலாவுக்கு பிரார்த்தித்தவர் கண்டிப்பாக தொழுகைக்கு வந்து விடுவார், வசீலாவுக்குப் பிரார்த்தித்து விட்டு தொழாமல் ஒளிய மாட்டார்.

இன்று தொழுகையாளிகளிலும் கூட சிலர் பாங்கு சொல்வதை ஒருப்பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சை நிருத்தாமல் தொடர்ந்து பேசிக் கோண்டே இருப்பதும், கடைகளில் நின்று பொருள்களை வாங்கிக் கொண்டிருப்பதுமாக இருக்கின்றனர். இது மறுமையில் அடையவிருக்கும் நன்மையை நாமேத் தடுத்துக் கொள்ளக்கூடாது.

பாங்கிற்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு ஸலவாத் ஓதிவிட்டு, அதன்பிறகு கீழ்காணுமாறு வசீலாவுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்

பொருள்: 'முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 614

பாங்கிலிருந்து தொடங்கி தொழுவது முதல் தஸ்பீஹ், துஆ, சுன்னத் தொழுகை என்றுப் பள்ளியை விட்டு வெளியில் வரும்வரை தொழுகைக்கான அமல்கள் நீடிக்கின்றன. அவற்றை முழுமையாக நிறைவு செயது அதற்கான நற்கூலிகளை குறைவின்றி அறுவடை செய்துகொள்ளும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Tuesday, September 14, 2010

அல்லாஹ்வை அழகிய முறையில் அவன் பண்புகளைக் கொண்டு புகழ்ந்து, பிறகு தன் தேவைகளைக் கேட்டல்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ்! ஏழு வானங்கள், பூமியின் ரப்பே! மகத்தான அர்ஷின் ரப்பே! எங்களது ரப்பே! ஒவ்வொரு வஸ்துவின் ரப்பே! வித்துக்களையும், தானியங்களையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆனை இறக்கியவனே! உன்னிடம், எனது நஃப்ஸின் தீங்கிலிருந்தும், நீ உச்சி முடியை பிடித்துள்ள ஒவ்வொரு ஊர்ந்து செல்லும் பிராணியின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். நீயே முதலாமவன். உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே முடிவானவன். உனக்கு பின்பு எதுவுமில்லை. நீ வெளிப்படையானவன். உனக்கு மேல் எதுவுமில்லை. நீயே மறைந்தவன். உன்னை விட்டும் (மறைந்தது) எதுவுமில்லை. என் சார்பாக கடன் அனைத்தையும் நிறைவேற்றிவிடு. ஏழ்மையிலிருந்து (இரட்சித்து) என்னை பிறரின் தேவையற்றவனாக ஆக்கிவிடு! (ஸஹீஹ் முஸ்லிம்)

Friday, April 16, 2010

குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (1)

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஅஃமது வலஹுல் Fபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்

பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடைகள் தந்தவன் அவனே. கிருபையும் அவனுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.

உச்சரிப்பு: லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.

உச்சரிப்பு: ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப் பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணை மிக்கவனும் ஆவாய்!

Friday, June 26, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (44)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَأَعُوْذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூல்: இப்னுமாஜா

Friday, June 12, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (42)

أَللَّهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ، وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ، أَللَّهُمَّ مَا رَزَقْتَـنِيْ مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ قُوَّةً لِّيْ فِيْمَا تُحِبُّ، أَللَّهُمَّ مَا زَوَيْتَ عَنِّيْ مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ فَرَاغًا لِّيْ فِيْمَا تُحِبُّ .

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு உன்னுடைய நேசத்தையும் நான் யாரை நேசித்தால் உனது நேசத்திற்குரியவனாக ஆக முடியுமோ அவரின் நேசத்தையும் எனக்குத் தந்தருள் புரிவாயாக!. யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ எனக்கு தந்துள்ளாய். எனவே நீ விரும்பும் செயல்களில் நான் ஈடுபட எனக்கு சக்தியூட்டக் கூடியதாக அதனை ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! நான் விரும்பிதை நீ என்னை விட்டும் தடுத்துவிட்டாய். எனவே நீ விரும்பும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பாக அந்த இடைவெளியை எனக்கு ஆக்குவாயாக!

ஆதார நூல்: திர்மிதி

Friday, February 20, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (28)

أَللَّهُمَّ اغْفِرْلِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَعَافِنِيْ، وَارْزُقْنِيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக! கிருபை செய்வாயாக! நேர்வழி காட்டுவாயாக! சுகமளிப்பாயாக! உணவளிப்பாயாக!

أَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا،وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفـِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நானே மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவராலும் எனது பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் பேரருளால் என்னை மன்னித்து, கிருபையும் செய்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.

ஆதார நூற்கள் : முஸ்லிம், புகாரி.

Friday, January 23, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (24)

أَللَّهُمَّ احْفَظْنِيْ بِاْلإِسْلاَمِ قَائِمًا، وَاحْفَظْنِيْ بِاْلإِسْلاَمِ قَاعِدًا،وَاحْفَظْنِيْ بِاْلإِسْـلاَمِ رَاقِـدًا وَلاَ تُشْمِتْ بِيْ عَـدُوًّا وَلاَ حَاسِدًا، أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ

பொருள்: யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் இஸ்லாத்தைப் பேணி நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் பரிகாசத்திற்கு ஆட்படுத்தா திருப்பாயாக! யாஅல்லாஹ்! உன்னிடமுள்ள அனைத்து நல்ல பொக்கிஷங்களிலிருந்தும் (எனக்கு தருமாறு) நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னிடமுள்ள அனைத்து தீய பொக்கிஷங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூல் : ஹாகிம்

Friday, January 16, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (23)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمالَمْ أَعْلَمْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْـدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا إسْتَعَاذَ بِكَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَامِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْـتَـهُ لِيْ خَيْرًا .

பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய (முஹம்மது-ஸல்-) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் (ஏற்பாடுகளையும்) எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.

ஆதார நூல்கள்: அஹ்மத், ஹாகிம்

Friday, November 28, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (20)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُوْنِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ اْلأَسْقَامِ

பொருள்: யாஅல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புகள் அழுகிவிழும் நோய் மற்றும் பிற தீயநோய்கள் ஆகிய அனைத்திலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதார நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

Friday, November 21, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (19)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْـعِيْ، وَمِنْ شَرِّ بَصَرِيْ، وَمِنْ شَرِّ لِسَانِيْ، وَمِنْ شَرِّ قَلْـبِيْ، وَمِنْ شَرِّ مَنِـيِّـيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கை விட்டும் உள்ளத்தின் தீங்கை விட்டும் எண்ணத்தின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

Friday, November 07, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (17)

رَبِّ أَعِنِّيْ وَلاَتُعْنِ عَليَّ، وَانْصُرْنِيْ وَلاَ تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِيْ وَلاَ تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدَي إِلَيَّ، وَانْصُرْنِيْ عَلَى مَنْ بَغَي عَلَيَّ، رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَاكِرًا، لَكَ ذَاكِرًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهًا مُنِيْبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ، وَاغْسِلْ حَوْبَـتِيْ، وَأَجِبْ دَعْوَتِيْ، وَثَبِّتْ حُجَّتِيْ، وَاهْدِ قَلْبِيْ، وَسَدِّدْ لِسَانِيْ، وَاسْلُلْ سَخِيْمَةَ قَلْبِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக! எனக்கு உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்காக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக! எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக! இறைவா! எனது பாமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!

ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்

Friday, October 31, 2008

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கும் அரண்!

''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).

'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).

Saturday, October 18, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (14)

لاَ إِلَـهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الْظَالِمِيْنَ


பொருள்: வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம் இழைத்தோரில் ஒருவனாகி விட்டேன்.

Friday, October 17, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (13)

أَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ، فَلاَ تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرَفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ، لاَ إِلَـهَ إِلاَّ أَنْتَ


பொருள்: யாஅல்லாஹ்! நான் உனது அருளையே ஆதரவு வைத்துள்ளேன். (அதனை) கண் மூடித்திறக்கும் அளவிற்குக் கூட (நிறுத்தி) எனது உள்ளத்தை ஏங்க வைத்து விடாதே!. மேலும் என்னுடைய அனைத்து காரியங்களையும் சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.