Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Friday, December 24, 2010

நீடித்த நிலையான நற்கருமங்கள் என்பவை எவை?

அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் (நீடித்த நிலையான நற்கருமங்கள்) என்பன: ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், வலா ஹௌல வஅலா குவ்வத்த இல்லாபில்லாஹ் எனும் கலிமாக்களாகும்.

பொருள்: அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வி(ன் உதவியும், பாதுகாப்புமி)ன்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் இல்லை. (தீமைகளை விட்டு விலக) எந்த சக்தியும் இல்லை.

ஆதார நூல்: அஹ்மத். ஹதீஸ் எண்: 513. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது. பார்க்க: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 297. புலூகுல் மறாம் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் இதனை அபூ ஸயீத் (ரலி) அவர்களின் அறிவிப்பாக - நஸாயீயிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்: இந்த அறிவிப்பை இப்னு ஹிப்பானும், ஹாகிமும் நம்பகமானது எனச் சொல்லியுள்ளனர்.

Friday, June 26, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (44)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا ، وَأَعُوْذُبِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கிறேன். மேலும் பயனளிக்காத கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூல்: இப்னுமாஜா

Friday, March 06, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (30)

أَللَّهُمَّ إِنَّا نَسْـأَلُكَ مُـوْجِبَاتِ رَحْمَـتِكَ وَعَزَائِمَ مَغْفِـرَتِكَ وَالسَّـلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالْفَوْزَ بِالْجَنَّةِ وَالنَّجَاةَ مِنَ النَّارِ

பொருள்: யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து நல்லறங்களின் பிறதி பலன்களையும் சொர்க்கத்தைப் பெற்று வெற்றி பெறவும் நரகை விட்டும் ஈடேற்றம் பெறவும் (அருள்புரியுமாறு) நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.

ஆதார நூல்: ஹாகிம்.

Friday, January 16, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (23)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمالَمْ أَعْلَمْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْـدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا إسْتَعَاذَ بِكَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَامِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْـتَـهُ لِيْ خَيْرًا .

பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய (முஹம்மது-ஸல்-) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் (ஏற்பாடுகளையும்) எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.

ஆதார நூல்கள்: அஹ்மத், ஹாகிம்

Friday, December 12, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (21)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ وَاْلأَعْمَالِ وَاْلأَهْوَاءِ

பொருள்: யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)

أَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!

(ஆதாரம்: திர்மிதி)

Saturday, October 11, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (10)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ

பொருள்: யாஅல்லாஹ்! நான் செய்தவைகளின் தீயவிளைவை விட்டும் நான் செய்யாதவற்றின் தீயவிளைவுகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூல்: புகாரி.

Friday, October 10, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (9)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَ ةِ نِقْمَتِكَ، وَجَمِيْعِ سَخَطِكَ

பொருள்: யாஅல்லாஹ்! உனது அருட்கொடைகள் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும் ஆரோக்கியத் தன்மை (என்னைவிட்டு) மாறுவதை விட்டும் உனது திடீர் தண்டனையை விட்டும் உனது அனைத்துக் கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூல்: புகாரி.

Friday, September 26, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (6)

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَي

யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் (பிறரிடம்) தேவையற்ற நிலையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
ஆதார நூல்: புகாரி.

Wednesday, September 24, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (4)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ اْلأَعْدَاءِ

பொருள்: யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீயமுடிவுகளை விட்டும் விரோதிகளின் கேளி, கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்..

Tuesday, September 23, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (3)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

பொருள்: யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம், கப்ரின் வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

Monday, April 28, 2008

கோபத்தின் போது ஓத வேண்டிய துஆ!

َ أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ

அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ

அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்றும் கூறலாம். ஆதாரம்: புகாரி 6115