Showing posts with label நல்லறம். Show all posts
Showing posts with label நல்லறம். Show all posts

Friday, May 01, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (37)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்.

أَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ،وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றையே கற்றுத் தருவாயாக! மேலும் என்னுடைய கல்வியை அதிகப்படுத்துவாயாக!

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَـيِّـبًا،وَعَمَلاً مُتَقَبَّلاً

பொருள்: யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

ஆதார நூற்கள்: ஸஹீஹ் அல் ஜாமிஃ, இப்னுமாஜா.

Friday, March 06, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (30)

أَللَّهُمَّ إِنَّا نَسْـأَلُكَ مُـوْجِبَاتِ رَحْمَـتِكَ وَعَزَائِمَ مَغْفِـرَتِكَ وَالسَّـلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالْفَوْزَ بِالْجَنَّةِ وَالنَّجَاةَ مِنَ النَّارِ

பொருள்: யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து நல்லறங்களின் பிறதி பலன்களையும் சொர்க்கத்தைப் பெற்று வெற்றி பெறவும் நரகை விட்டும் ஈடேற்றம் பெறவும் (அருள்புரியுமாறு) நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.

ஆதார நூல்: ஹாகிம்.

Friday, December 19, 2008

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (22)

أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ،وَتَرْكَ الْمُنْكَرَاتِ،وَحُبَّ الْمَسَاكِيْنِ،وَأَنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمَنِيْ، وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ،وَحُبَّ مَنْ يُّحِبُّك،وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُـنِيْ إِلَىحُبِّكَ.

பொருள்: யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழை களை நேசிக்க அருள்புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.

ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்