Showing posts with label கண்ணியம். Show all posts
Showing posts with label கண்ணியம். Show all posts

Thursday, December 22, 2011

தனது உடலில் வலியை உணருபவர் என்ன செய்ய வேண்டும்? என்ன ஓத வேண்டும்?

தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்। பிறகு ஏழு தடவை இவ்வாறு ஓத வேண்டும்:

اَعُودُ بِاللهُِ وقُدرَتِهِ شَرٌِ مَا اَجِدُ وَ اُحَاذِرُ


”அவூதுபில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர்”

பொருள்: அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்; நான் உணருகிற அஞ்சுகின்ற தீமையை விட்டு!

Friday, December 12, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (21)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ وَاْلأَعْمَالِ وَاْلأَهْوَاءِ

பொருள்: யாஅல்லாஹ்! வெறுக்கத்தக்க குணங்கள், தீயசெயல்கள், கெட்ட ஆசைகள் ஆகியவற்றை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்)

أَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே மன்னிப்பவன். கண்ணியத்திற்குரியவன். மன்னிப்பை விரும்புகின்றவன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!

(ஆதாரம்: திர்மிதி)

Friday, October 31, 2008

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கும் அரண்!

''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3293 அபூ ஹுரைரா (ரலி).

'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! ஏன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6405 அபூஹுரைரா (ரலி).

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹூல்முல்க்கு வலஹுல் ஹம்துவஹுவ அலா குல்லி ஷையின் கதீர் என பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

புஹாரி : 6404 அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி).

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 6406 அபூஹூரைரா (ரலி).