Friday, December 24, 2010

நீடித்த நிலையான நற்கருமங்கள் என்பவை எவை?

அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் (நீடித்த நிலையான நற்கருமங்கள்) என்பன: ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், வலா ஹௌல வஅலா குவ்வத்த இல்லாபில்லாஹ் எனும் கலிமாக்களாகும்.

பொருள்: அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வி(ன் உதவியும், பாதுகாப்புமி)ன்றி (நன்மைகள் செய்வதற்கு) எந்த ஆற்றலும் இல்லை. (தீமைகளை விட்டு விலக) எந்த சக்தியும் இல்லை.

ஆதார நூல்: அஹ்மத். ஹதீஸ் எண்: 513. இதன் அறிவிப்புத் தொடர் நம்பகமானது. பார்க்க: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 1 பக்கம் 297. புலூகுல் மறாம் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் இதனை அபூ ஸயீத் (ரலி) அவர்களின் அறிவிப்பாக - நஸாயீயிலிருந்து எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்: இந்த அறிவிப்பை இப்னு ஹிப்பானும், ஹாகிமும் நம்பகமானது எனச் சொல்லியுள்ளனர்.

No comments: