Showing posts with label மன்னிப்பாளன். Show all posts
Showing posts with label மன்னிப்பாளன். Show all posts

Friday, March 05, 2010

தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: ஹதீஸ் எண்: 6306

Friday, May 22, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (40)

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُـوْرُ

பொருள்: யாஅல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக்கொள்பவனும் மன்னிப்பவனுமாவாய்.

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، اْلأَحَدُ، الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே இறைவன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன். தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன் என்று நான் சாட்சி கூறியதின் பொருட்டால் நான் உன்னிடம் (என் தேவைகளைக்) கேட்கிறேன்.

ஆதார நூற்கள்: திர்மிதி, அபூதாவூத்.