பிரயாணம் ஆரம்பிக்கும் போது...
"பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமாகுன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன்"
பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, இதன் மீது பிரயாணம் செய்ய இதனை வசப்படுத்தித் தந்த (அல்லாஹ்) அவன் பரிசுத்தமானவன். (அவன் அவ்வாறு செய்யவில்லையெனில்) எமக்கு இதனை சாதிக்க முடியாது. மேலும் அவனிடமே நாம் திரும்பிச் செல்லவுள்ளோம்.
பின்னர் "அல்ஹம்துலில்லாஹ்" என (3 முறையும்) "அல்லாஹ் அக்பர்" என (3 முறையும்) கூறிவிட்டு, "சுப்ஹானகல்லாஹும்ம இன்னீ ழளம்து நப்ஸீ, ஃபக்பிர்லீ, ஃபஇன்னஹு லா யஃபிருத்துனூப இல்லா அன்த" என ஓத வேண்டும்.
பொருள்: தூய்மையான இறைவா! எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன். எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! பாவங்களை மன்னிப்பவன் உன்னையன்றி வேறு யாருமில்லை.
மக்காவின் எல்லையை அடைந்ததும்...
"அல்லாஹும்ம ஹாதா ஹரமுக வஅம்னுக, ஃபஹர்ரிம்னீ அலன்னார், வஅமின்னீ மின் அதாபிக யவ்ம துப்அஸு இபாதக, வஜ்அல்னீ மின் அவ்லியாஇக வஅஹ்லி தாஅதிக"
பொருள்: இறைவா! இது உனது சங்கையான வீடும், அபயம் அளிக்கும் இடமுமாகும். இறைவா! உனது அடியார்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் உனது வேதனைகளிலிருந்து எனக்குப் பாதுகாப்பளிப்பாயாக! உனது நல்லடியார்களில் ஒருவனாக என்னை ஆக்குவாயாக!
கஃபாவைக் கண்டவுடன்...
"அல்லாஹும்ம ஸித் ஹாதல் பைத தஷ்ரீபன் வதஃழீமன் வதக்ரீமன் வமஹாபதன், வஸித் மன் ஷர்ரபஹு வஅழ்ழமஹு மிம்மன் ஹஜ்ஜஹு அவிஃதமரஹு தஷ்ரீபன் வதஃழீமன் வதக்ரீமன் வபிர்ரன், அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ்ஸலாம் ஃபஹய்யினா ரப்பனா பிஸ்ஸலாம்"
பொருள்: இறைவா! உனது இந்த இல்லத்துக்கு கண்ணியத்தையும், மேன்மையையும் அதிகரிப்பாயாக! மேலும் ஹஜ் செய்பவர்களிலும் யார் அதனை கண்ணியம், மேன்மைப் படுத்துகிறார்களோ அவர்களுக்கும் கண்ணியத்தையும், மேன்மையையும், நன்மையையும் அதிகரிப்பாயாக! இறைவா! நீ சாந்தி மிக்கவன், உன்னிடமே சாந்தியுண்டு, எனவே எங்களை சாந்தியுடன் வாழ வைப்பாயாக!
ஹஜருல் அஸ்வத்தின் முன்...
"பிஸ்மில்லாஹ், அல்லாஹ் அக்பர், அல்லாஹும்ம ஈமானன்பிக, வதஸ்தீகன் பிகிதாபிக, வவபாஅன் பிஅஹ்திக, வத்திபாஅன் லிஸுன்னதி நபியிக்க முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"
பொருள்: இறைவா! உன்னை விசுவாசித்து உனது வேத நூலை உண்மைப்படுத்தி, உனது வாக்குறுதியை நிறைவேற்றி, உனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி உனது பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.
ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் வரை...
"ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்"
பொருள்: இறைவா! எமக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தந்தருள்வாயாக! மேலும் எம்மை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக!.
ஸம்-ஸம் நீர்...
'ஸம்ஸம் நீரை ஒருவர் எந்த நிய்யத் (எண்ணத்)துடன் குடிக்கிறாரோ அவருக்கு அது நிறைவேறி விடும்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்) எனவே ஸம்ஸம் நீர் அருந்தும்போது தமக்குத் தேவையான துஆக்களை ஓதிக் கொள்வது சுன்னத்தாகும்.
நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸம்ஸம் நீர் அருந்தும்போது கீழ்க்காணும் துஆவை ஓதிக் கொண்டார்கள்:
"அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாபிஅன் வரிஜ்கன் வாஸிஅன் அஷிபாஅன் மின் குல்லி - தாஇன் பிரஹ்மதிக யா அர்ஹமர்ராஹிமீன்"
பொருள்: இறைவா! அன்பாலர்களிலெல்லாம் மிகவும் அன்பாலனே! உனது அருளைக் கொண்டு உன்னிடம் பயன் மிக்க நல்லறிவையும், தாராளமான சீவனோபாயத்தையும், சகல நோய்களிலிருந்தும் நிவாரணத்தையும் வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment