பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு எல்லா ஷைத்தான்களையும், விஷஜந்துக்களையும், தீண்டக்கூடிய எல்லா கண்களையும் விட்டும் உங்கள் இருவருக்காக பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வாறு அவர்கள் ஓதிவிட்டு அவ்விருவரையும் நோக்கி நிச்சயமாக உங்களுடைய (தந்தையாம் இப்றாஹீம்) அவர்கள் (தமது மக்களாகிய) இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோருக்கு இவ்வாறே பாதுகாப்பு துஆச் செய்து கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி)
துஆவை ஓதி சம்பந்தப்பட்டவர் மீது ஊதுவது:
நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் எவருக்கேனும் வியாதி ஏற்பட்டு விட்டால், குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதுவார்கள். (ஆயிஷா (ரழி) முஸ்லிம்)
தாமே ஓதி தம்மீது ஊதிக் கொள்வதும், தமது கையினால் தடவிக்கொள்வதும்:
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் நலம் குன்றிவிட்டால் குல்ஹு வல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் Fபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய ஸூராக்கலை ஓதி தம்மீது ஊதிக் கொள்வார்கள், தமது கைகளால் அவ்வாறுஓதியதை (ஊதி) தடவிக் கொள்வார்கள். (ஆயிஸா (ரழி) முஸ்லிம் )
தமக்கு இயலாத போது பிறர் ஓதி கையில் ஊதி தடவி விடுதல்:
நபி (ஸல்) அவர்கள் மரண தருவாயில் ஏற்பட்ட வியாதியின்போது, நான் குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதி (எனது கையைக் கொண்டு நான் அவர்களைத் தடவி விடாமல்) அவர்களுடைய கையைக் கொண்டே அவர்களைத் தடவி விட்டேன். ஏனெனில் எனது கையை விட அவர்களுடைய கை பரகத் வாய்ந்ததாகும். புகாரியின் மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு ஓதி ஊதி தடவி விடும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் உள்ளது. (ஆயிஷா (ரழி) புஹாரி, முஸ்லிம்)
தினசரி படுக்கையின் போது 3 சூராக்களை ஓதி கையில் ஊதி உடலில் தடவிக்கொள்வது:
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் செல்லும்போது, குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி தமது கையில் ஊதித் அதைத் தமது முகத்திலும் தமது கைகள் எட்டும் அளவு தமது உடலிலும் தடவிக் கொள்வார்கள். (ஆயிஷா(ரழி) புஹாரி)
நாவால் துஆவை ஓதிக் கொண்டு வலது கையால் நோயாளியைத் தடவுதல்:
நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தாரில் ஒருவரைத் தமது வலக் கரத்தால் தடவிக் கொண்டே பின் வரும் பொருளில் துஆ ஓதிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வே! மக்களின் ரட்சகனே!! தீங்கை அகற்றி பூரண சுகத்தைத் தந்தருள். நீயே பூரண சுகத்தை அளிப்பவன். உனது பூரண சுகமின்றி வேறு பூரண சுகம் என்பதே யில்லை. எந்த நோயையும் விட்டு வைக்காது பரிபூரண சுகத்தைத் தந்தருள்வயாக! (ஆயிஷா (ரழி) புஹாரி,முஸ்லிம்)
அல்லாஹ்வே! மக்களின் ரட்சகனே!! தீங்கை அகற்றி பூரண சுகத்தைத் தந்தருள். நீயே பூரண சுகத்தை அளிப்பவன். உனது பூரண சுகமின்றி வேறு பூரண சுகம் என்பதே யில்லை. எந்த நோயையும் விட்டு வைக்காது பரிபூரண சுகத்தைத் தந்தருள்வயாக! (ஆயிஷா (ரழி) புஹாரி,முஸ்லிம்)
வலியுள்ள இடத்தில் கையை வைத்துக்கொண்டு ஓதுவது:
ஒருமுறை உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தமது உடலில் ஏற்பட்டிருந்தோர் வலியைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்)அவர்கள் அவரை நோக்கி, உமது உடலில் வலியுள்ள இடத்தில் உமது கையை வைத்துக் கொண்டு பிஸ்மில்லாஹி என்று மும்முறை ஓதுவீராக! (ஜுபைர் பின் முத்யிம் (ரழி) முஸ்லிம்)
கண்திருஷ்டி:
கண் திருஷ்டி என்பது உண்மைதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி) புஹாரீ)
நான் கண் திஷ்டிடியிலிருந்து தப்புவதற்காக பதுகாப்பு துஆவை ஓதிக் கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். (ஆயிஷா (ரழி) புஹாரி)
விஷக்கடிகளுக்கு ஓதி பதுகாப்புத் தேடுவது:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஓதி பதுகாப்புத் தேடிக் கொள்வது பற்றி கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எல்லா விஷக் கடிகளுக்கும் ஓதி பதுகாப்புத்தேடி கொள்ள அனுமதித்துள்ளார்கள் என்றார்கள். (அப்துர் ரஹ்மான் இப்னுல் அஸ்வத் (ரழி) முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் எதிரில் ஒருவர் மற்றவர்க்கு ஓதிப் பார்த்தல்:
ஒருமுறை நாங்கள் நபி (ஸல்)அவர்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒருவருக்குத் தேள் கொட்டி விட்டது. அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே நான் இவருக்கு ஓதிபார்க்கிறேன் என்றார். உங்களில் ஒருவர் தமது சகோதரருக்கு உதவி செய்ய இயலுமானால் அவர் செய்து கொள்வராக! என்றார்கள். (ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) முஸ்லிம்)
ஒருமுறை ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து இவ்விரவு தமக்கு தேள் கொட்டி தாம் தூங்கவில்லை என்று கூறினார், அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீர் மாலைநேரம் வந்தவுடன், பரிபூரணமான அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் பதுகாப்புத் தேடுகிறேன் என்று நீர் ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் உமக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று கூறினார்கள். (ஸுஹைல் பின் அபீஸாலிஹ் (ரழி) அபூதாவூத்)
ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து முஹம்மத் அவர்களே! நீங்கள் சுகக் குறைவாயிருக்கிறீர்களா? என்றார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள். அப்போது அவர்கள் பின்வரும் பொருள் கொண்ட துஆவை ஓதினார்கள்.
அல்லாஹ்வின் பெயரால் உமக்குத் தொந்தரவளிக்கும் எல்லாவற்றை விட்டும், எல்லா மனிதர்களின் தீங்கையும், பொறாமைக்காரனின் கண்ணை விட்டும், நான் உமக்காக பதுகாப்புத் தேடுகிறேன்.அல்லாஹ் உமக்கு பரிபூரண சுகத்தை நல்குவானாக! அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் உமக்காக பதுகாப்புத் தேடுகிறேன். (அபூ ஸயீத் (ரழி) முஸ்லிம்)
ஷிர்க் இல்லாத வாசகத்தைக் கொண்டும் பதுகாப்பு துஆ ஓதுவது:
நாங்கள் அறியாமைக் காலத்தில் சில வாசகங்களைக் கூறி பாதுகாப்புத் தேடுவோம் அல்லாஹ்வின் தூதரே! அதுபற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்றோம். அதற்கு அவர்கள் உங்கள் பாதுகாப்பு வாசகத்தை என்னிடம் எடுத்து கூறுங்கள் என்றார்கள். (அவ்வாறு எடுத்துக் கூறப்பட்டது) அதற்கு அவர்கள் ஷிர்க் இல்லாத வகையில் உள்ள பாதுகாப்பு வாசகத்தை ஓதுவதால் குற்றமில்லை என்றார்கள். (அவ்ஃபு பின் மாலிக் (ரழி) முஸ்லிம்)
என்னுடைய உம்மத்தில் 70000 நபர்கள் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் பிரவேசிப்பார்கள். மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள், சகுணம் பார்க்க மாட்டார்கள், தமது ரப்பிடத்திலேயே தமது காரியங்களை ஒப்படைத்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புஹாரி,முஸ்லிம்)
நூல் கயிற்றை மந்திரித்து கட்டுவது (தாயத்து):
ஒரு முறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிறைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் இது எனக்காக மந்திரிக்கப்பட்ட கயிறு என்றேன். உடனே அவர்கள்அதைப் பிடித்து அறுத்து விட்டு நீங்களோ (நபித்தோழராகிய) அப்துல்லாஹ்வின் குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் மிக அதிகமாக ஒதுங்கியவர்கள். நான் பின் வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன், அதாவது "நிச்சயமாக மந்திரித்தல், கஷ்ட நிவர்த்திக்காக கழுத்தில் மணியைக் கோர்த்துக் கட்டுதல், கணவன் மனைவிக்கு மத்தியில் நட்பு நீடிப்பதற்காக மந்திர வேலை செய்தல் ஆகியவை ஷிர்க்கின்பால் சேர்க்கக் கூடியவையாகும்.
அப்போது நான் நீங்கள் என்ன இவ்வாறு கூறுகிறீர்கள்? எனது கண்ணில் வலி ஏற்ப்பட்டு கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது நான் ஒரு யூதரிடம் சென்று அதற்காக அவர் மந்திரித்தபோது நீர் வடிதல் நின்று விட்டதே! என்றேன். அதற்கு அவர்கள் இது எல்லாம் ஷைத்தானுடைய வேலையாகும்; அவன் தனது கையால் கண்களை இடித்து கொண்டிருக்கிறான், மந்திரிக்கும்போது அகன்று கொள்கிறான். நீர் இதற்காக நபி (ஸல்) அவர்கள் ஓதியது போல் ஓதினாலே உமக்குப் போதும்.
ஒருவர் தமது உடலில் யாதேனும் ஒன்றைக் கட்டிக் கொள்வராயின் அவர் நம்பிக்கை அதன் பக்கமே திரும்பிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அப்துல்லா இப்னு உகைம் (ரழி) திர்மிதீ)
அதாவது: பூமியிலும் வானத்திலுமுள்ள எப்பொருளும் அவன் நாமத்துடன் எவ்வித இடரும் செய்ய முடியாதே அத்தகைய அல்லாஹ்வின் திருநாமத்தால்... அவன் (அனைத்தயும்) கேட்பவனாகவும், அறிபவனாகவுமிருக்கிறான்.
ஆகவே மேற்கண்ட ஸஹீஹான ஹதீஸ்களில் அடிப்படையில் பாதுகாப்பு துஆவை ஓதலாம். ஆனால் எதேனும் ஓதி தண்ணீரில் ஊதி, அல்லது எழுதி, அதைக் குடிப்பதோ, அந்த தண்ணீரால் முகம் கை கால்களை கழுவினால் நோய் குணமாகும் என்று நம்புவதோ நபி வழியில் இல்லாத ஒன்றாகும்.
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் தன்னிச்சையாக இல்லாமல் ஹதீஸை முன் வைத்து அதன் வரம்புக்கு உட்பட்டு நடந்து கொள்வோமாக!
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் தன்னிச்சையாக இல்லாமல் ஹதீஸை முன் வைத்து அதன் வரம்புக்கு உட்பட்டு நடந்து கொள்வோமாக!
நன்றி: http://www.readislam.net/
No comments:
Post a Comment