Friday, August 06, 2010

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)

2 comments:

Jafar ali said...

அன்புள்ள இஸ்லாம் குரல் வலைத் தள நிர்வாகி அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது வலைத்தளத்தில் பிரார்த்தனைப் பேழைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள

''தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டனஇ தாகம் தீர்ந்து விட்டதுஇ கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது' (அபூதாவுத்)' பின்வரும் காரணங்களினால் ஆதாரபூர்வமற்றதாகும்.

'அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் நேரம் 'தஹபழ்ழமஉஇ வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அழ்ழாஹ்' எனும் பிரார்த்தனையை ஓதுபவர்களாக இருந்தார்கள்.' (நூற்கள்: அபூதாவூத்-2359இ
தாரகுத்னி-25இ சுனனுன் நஸாயி-3329இ ஹாகிம்-1536)



இந்த ஹதீதில் இடம்பெறும் 'மர்வான் பின் ஸாலிம் அல் முகப்பஃ' என்பவர் இனங்காணப்படாத ஒரு அறிவிப்பாளராகும். இவரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைத் தவிர வேறு எந்த அறிஞரும் நம்பகமானவர் என்று குறிப்பிடப்படவில்லை.

இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களைப் பொறுத்தமட்டில் அறிவிப்பாளர்களை நம்பகப்படுத்தும் விடயத்தில் கவன யீனமானவர் என விமர்சிக்கப்பட்டவராகும். காரணம் அவர் இனங்காணப்படாத அறிவிப்பாளர்களைக் கூட நம்பகமானவர்கள் என சொல்லும் வழக்கமுடையவர். ஏனெனில் அவரிடத்தில் நம்பகமானவர் என்பதற்கு வரைவிலக்கணம் 'எவரிலே விமர்சனம் கூறப்படவில்லையோ அவர் நம்பகமானவர்' என்பதாகும்.

உதாரணத்திற்கு ரஹீம் என்ற மனிதர் ஒரு ஹதீதை அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி ஹதீத் துறை அறிஞர்கள் நல்லபிப்பிராயம் கொண்டுள்ளனரா? அல்லது கெட்ட அபிப்பிராயம் கொண்டுள்ளனரா? என்று பார்ப்போம். நல்லபிப்பிரா யங்கள் கொண்டிருந்தால் நம்பகமானவர் என தீர்ப்புச் சொல்லப்படும்.

தீய அபிப்பிராயங்கள் கொண்டிருந்தால் பலவீனமானவர் என தீர்ப்புச்சொல்லப்படும். இரண்டுமே இல்லாவிட்டால் ரஹீம் என்பவரை 'இனங்காணப்படாதவர்' என அழைப்போம். இதுதான் இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர உள்ள அனைத்து அறிஞர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களோ 'யார் என்றே அறியப்படாத ரஹீமையும் நம்பகமானவர் என்றுதான் குறிப்பிடுவார். இதே நிலைதான் குறித்த செய்தியில் இடம்பெறும் 'மர்வான் பின் ஸாலிம் அல் முகப்பஃ' என்பவரின் நிலையுமாகும். அவரை எவரும் புகழ்ந்து கூறியதும் இல்லை. இகழ்ந்து கூறியதும் இல்லை. எனவே இப்படிப்பட்ட அறிவிப்பாளரைத்தான் ஹதீத் துறை சார் அறிஞர்கள் 'இனங்காணப்படாத அறிவிப்பாளர்' என்று அழைப்பர். எனினும் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் மாத்திரம் இவரை நம்பகப்படுத்தியிருப்பதானது அவர்களது கவனயீனத்தை தெளிவாக எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

மேலே நாம் குறிப்பிட்டவற்றிற்கப்பால் குறித்த 'மர்வான் இப்னு ஸாலிம்' என்ற அறிவிப்பாளரை இனங்காணுவதில் ஹாகிம் தஹபி போன்ற அறிஞர்கள் தவறிழைத்துள்ளனர். (அழ்ழாஹ் அவர்களின் நல்லெண்ணங்களுக்கும் தேடலுக்கும் நற்கூலிகளை வழங்க வேண்டும்).

இதனால்தான் ஸஹீஹுல் புஹாரியில் இடம்பெறுகின்ற நம்பகமான 'மர்வான் அல் அஸ்பர்' என்ற அறிவிப்பாளர்தான் என அவ்விருவரும் தவறுதலாக கருதிவிட்டனர்.

அனுப்புனர்: arshathalathary

Isaam said...

இமாம் தாருகுத்னியின் ஸஹீஹ் என்ற தரத்தை இமாம் இப்னு ஹஜர் தல்கீஸ் அல் ஹபீர் என்ற நூலில் உடன் படுகிறார். இமாம் அல்பானி ஹசன் என்று தீர்ப்பளித்துள்ளார்கள் பார்க்க இர்வாஉல் கலீல்