- யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக.
- யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக.
- யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக.
- யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக.
- யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.
- யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக.
- யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக.
- யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக.
- யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.
- யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக. ஆமீன்.
Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts
Friday, February 01, 2008
யா அல்லாஹ்! இஸ்லாமிய உம்மத்தை ஒரே உம்மத்தாக ஆக்குவாயாக!
Labels:
அல்லாஹ்வின் உதவி,
இஸ்லாம்,
எதிரிகள்,
சமுதாயம்,
யா அல்லாஹ்,
வழிகாட்டல்
Subscribe to:
Posts (Atom)