ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதைப் பொருட்டாகக் கொண்டு கேட்கப்படும் துஆக்களில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், அவனுடைய மேன்மைக்குரிய தன்மைகளையும், குணங்களையும் பொருட்டாகக் கொண்டு அதன் நிமித்தம் இறைவனிடம் கேட்டால் அந்த துஆவுக்கு பெறும் மதிப்பு இருக்கிறது.
அங்கீகரிக்கப்படுவதற்கான அருகதையையும் இந்த துஆ அடைகிறது. ஏனெனில்'இறைவா! நீ நேர்வழியில் செலுத்துகிறவன், கொடைவள்ளல், உதவி ஒத்தாசைகள் புரிகிறவன், இப்படியெல்லாம் நீ இருப்பதின் பொருட்டால் என்னை நேர்வழியில் செலுத்துவாயாக! எனக்கு நீ அள்ளி வழங்குவாயாக! எனக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்தருள்வாயாக! எனக்கூறி நாம் பிரார்த்திக்கும்போது நமக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அவையனைத்துமே அல்லாஹ்வின் தன்மைகளுள் உட்பட்டவையாக இருக்கின்றன என நாம் ஏற்றுக் கொள்கிறோம். அத்தன்மைகளால் அல்லாஹ் வர்ணிக்கப்பட்டவனாகவும் நாம் விசுவாசிக்கிறோம். இதனால் நம் பிரார்த்தனைகளை விரைவில் அங்கீகரிப்பதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோமல்லவா!
No comments:
Post a Comment