ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் திக்ரைக் கற்றுத் தாருங்கள் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள்
لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، اَللهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ
லாஇலாஹ இல்லலல்ல்ஹு வஹ்தஹு லா ஷரீகலஹு, அல்லாஹு அக்பர் கபீரன் வல்ஹம்துலில்லாஹி கஸீரன், சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஜீஜில் ஹகீம்.
என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். அதற்கு அவர் இவைகள் இறைவனைப் புகழ்வதற்காக உள்ளவை. எனக்காக எதுவும் இல்லையா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள்.
أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ
அல்லாஹும்மஃபி(F)ர்லி வர்ஹம்னி வஹ்தினி வர்ஜுக்னி
(அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
No comments:
Post a Comment