Friday, March 13, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (31)

أَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ، وَانْقِطَاعِ عُمُرِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனது முதுமைப் பருவத்திலும் எனது ஆயுள் முடியும் நிலையிலும் உன்னுடைய அருட் கொடைகளை (ரிஸ்கை) எனக்கு விசாலப்படுத்துவாயாக!

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ،وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக! என்னுடைய வீட்டை விசாலமாக்குவாயாக! என்னுடைய உணவில் அபிவிருத்தி செய்வாயாக!

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ،وَرَحْمَتِكَ فَإِنَّهُ لاَ يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ

பொருள்: யாஅல்லாஹ்! உன்னுடைய தயாளத் தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை உன்னைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொள்ள முடியாது.

ஆதார நூற்கள்: ஹாகிம், அஹ்மத், தப்ரானி.

1 comment:

Jaleela Kamal said...

சகோதரர் ஜாபர் அவர்களுக்கு


அருமையான தூஆக்கள்
அழகாக எடுத்து ஆதாரத்துடன் போட்டு இருக்கிறீர்கள், இதற்குண்டான நன்மையை ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.