أَللَّهُمَّ جَنِّبْنِيْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ، وَاْلأَهْوَاءِ، وَاْلأَعْمَالِ وَاْلأَدْوَاءِ
பொருள்: யாஅல்லாஹ்! தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்றுவாயாக!
أَللَّهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيْهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِّيْ بِخَيْرٍ
பொருள்: யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த ரிஸ்கை -அருட் கொடைகளை- எனக்கு போதுமானதாக்கி, அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் -அருட்கொடைகளுக்கு- பகரமாக அதைவிட சிறந்தவற்றை எனக்குத் தருவாயாக!
أَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا
பொருள்: யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!
ஆதார நூற்கள்: ஹாகிம், திர்மிதி.