Showing posts with label முதுமை. Show all posts
Showing posts with label முதுமை. Show all posts

Friday, April 03, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (34)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِوَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَاقِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَأَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّئِ اْلأَسْقَامِ .

பொருள்: யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, கல்நெஞ்சம், பொடுபோக்கு, கஷ்டம், இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் வறுமை, நிராகரித்தல், பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல், நயவஞ்சகத்தனம், பிறர் போற்றவேண்டும் என்பதற்காகச் செயல்படல், பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகச் செயல்படல் -முகஸ்த்துதி- ஆகியவைகளை விட்டும், செவிடு, ஊமை, பைத்தியம், உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய், வெண் குஷ்டம் மற்றும் கெட்ட அனைத்து நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூற்கள்: ஹாகிம், பைஹகீ

Friday, March 13, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (31)

أَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ، وَانْقِطَاعِ عُمُرِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனது முதுமைப் பருவத்திலும் எனது ஆயுள் முடியும் நிலையிலும் உன்னுடைய அருட் கொடைகளை (ரிஸ்கை) எனக்கு விசாலப்படுத்துவாயாக!

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ،وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக! என்னுடைய வீட்டை விசாலமாக்குவாயாக! என்னுடைய உணவில் அபிவிருத்தி செய்வாயாக!

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ،وَرَحْمَتِكَ فَإِنَّهُ لاَ يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ

பொருள்: யாஅல்லாஹ்! உன்னுடைய தயாளத் தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை உன்னைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொள்ள முடியாது.

ஆதார நூற்கள்: ஹாகிம், அஹ்மத், தப்ரானி.

Friday, February 06, 2009

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (26)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنَ الْجُبْنِ،وَأَعـُوْذُ بِكَ مِنَ الْبُخْـلِ، وَأَعُـوْذُبِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ

பொருள்: யாஅல்லாஹ்! கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமைவரை என்னுடைய ஆயுட்காலம் நீடித்தல், உலகசோதனை, கப்ரின் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதார நூல் : புகாரி.